Pages

Thursday, December 8, 2011

Sehwag 219 Fastest 200 சேவாக் 149 பந்துகளில் 219 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்



The India opener smashed his way into the record books with his stupendous 219, surpassing Tendulkar’s 200 not out against South Africa in Gwalior on February 24 last year.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில், இந்திய அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் இரட்டை சதத்தைக் கடந்து புதிய சாதனை படைத்தார்.
இந்தூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கியது இந்திய அணி.

துவக்கம் முதலே அதிரடியாக பேட் செய்த சேவாக் 149 பந்துகளில் 219 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன் எடுத்த வீரர் என்ற புதிய சாதனையை அவர் நிகழ்த்தினார்.

இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 200 ரன்கள் விளாசியதே இதுவரை உலக சாதனையாக இருந்தது.

இந்தூர் ஒருநாள் போட்டியில், இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 418 ரன்கள் எடுத்தது.

சேவாக்கின் சாதனை ஆட்டத்துக்கு எதிர்முனையில் பக்கபலமாக இருந்த கம்பீர் 67 ரன்களையும், ரெய்னா 55 ரன்களையும் சேர்த்தனர்.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.