தனுஷ், சிம்பு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் பரவின. தனுஷ் எழுதி பாடிய ஒய்திஸ் கொலை வெறி பாட்டை சிம்பு ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து இணைய தளங்களில் கருத்துக்கள் வெளியிட்டனர்.
சிம்பு ஏற்கனவே எழுதிய லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே மற்றும் எவண்டி உன்னை பெத்தான் கையில் கிடைச்சா செத்தான் போன்ற பாடல்கள் சாயலில் தனுஷின் கொலை வெறி பாடல் இருப்பதாகவும் கூறப்பட்டது. தனுஷ் பாடலை விமர்சிக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனுசுடன் தகராறா என்று சிம்புவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
நண்பனாகவோ, அல்லது எதிரியாகவோ இருக்க வேண்டுமானால் ஒருவரைப் பற்றி ஒருவர் நன்றாக இருவருக்கும் தெரிந்து இருக்க வேண்டும். ஆனால் நானும் தனுசும் சந்திப்பது என்பது அரிதான விஷயம். அப்படி இருக்கும்போது தனுசுக்கும், எனக்கும் எப்படி பிரச்சினை ஏற்பட முடியும்.
நான் தனுஷ் வழியில் குறுக்கிடுவது இல்லை. அதுபோல் அவரும் என் வழியில் வருவது இல்லை. எனவே பிரச்சினை எங்கே இருக்கிறது. வேறு சில காரணங்களுக்காக எங்களுக்குள் தகராறு இருப்பது போன்று கற்பனையான செய்திகளை பரப்புகின்றனர்.
இவ்வாறு சிம்பு கூறினார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.