Pages

Wednesday, December 7, 2011

Uyirsol by Kabilan Vairamuthu உயிர்ச்சொல் | Top 10 Tamilnadu



Uyirsol by Kabilan Vairamuthu


ஒவ்வொரு கணமும் ஒரு துகள் இசையே – என்ஒவ்வோர் அணுவும் ஒரு துளி மழையே

கோப்பைகள் நிறைய பெளர்ணமி தீர்த்தம் என்

கூந்தல்வனத்தில் ஈர வசந்தம்

உனக்கான முத்தங்களை இதயப்பையில் சேர்த்திடுவேன் – உன்வருகை கொஞ்சம் தாமதமா? இன்னொரு இதயம் வாங்கிடுவேன்
திரியின்நுனியில் இயங்க வா என்உயிரின் திண்ணையில் உறங்க வா

சரணம் 1

நதிகள் யாவையும் குறையும் வேளையில்புதிய மேகங்கள் பொழிவாயா?

முட்கள் முளைத்த மெளனம் தீர்ந்திட

புறா புன்னகை புரிவாயா?
முகத்தில் நெற்றியில் இடையில் மடியில்புதிய நிறங்களில் நிறைவாயா?

விழிகளின் அடியில் வறுமைக்கோடே

புனிதத் தீண்டலில் மறைவாயா?
திரியின் நுனியில் இயங்க வா என்உயிரின் திண்ணையில் உறங்க வா

சரணம் 2

எத்தனை நாட்கள் காத்திருந்தேன் என்நீர்பரப்பில் ஒரு நிலவடிக்க

எத்தனைத் தவங்கள் நானிருந்தேன் என்
நந்தவனத்தில் பூவெடிக்க
என்னை இயக்கும் மென்பொருளாய்மெய்ப்பொருள் ஒன்றைக் கண்டுவிட்டேன்

என் மேல் விழுந்த இடிகளை அள்ளி

புதிய வானத்தில் புதைத்துவிட்டேன்
திரியின் நுனியில் இயங்க வா என்உயிரின் திண்ணையில் உறங்க வா


பாடல் டவுன்லோட் செய்ய

To Download

Official Website

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.