புத்தம் புது அம்சங்களுடன் கூடிய ஐபேடை ஆப்பிள் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்கிறது.
ஐபேட்-2வைவிட ஐபேட்-3 உயர்ந்த தொழில் நுட்பம் கொண்டு தயாரிக்கப்பட உள்ளது.
ஐபேட்-3 குறித்த எதிர்பார்ப்பு வாடிக்கையாளர் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
மக்களின் நாடித்துடிப்பை தெரிந்துகொண்டு அதற்கு ஏற்ப ஐபேட்-3யை வடிவமைத்துள்ளது ஆப்பிள்.
அதனால் தான் இந்த தொழில் நுட்ப சந்தையில் ஆப்பில் நிறுவனம் முன்னனி நட்ச்சத்திரமாகத் திகழ்கின்றது.
இதில் மிக முக்கிய அம்சமே இதனுடைய பேட்டரி தான்.அதிக நேரம் நீடித்து உழைக்கும் பேட்டர் வசதி இதில் பொருத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு வடிவமைக்கப்பட்ட மாடலையும் விட இந்த ஐபேட்-3 குறைந்த எடை கொண்டதாக உள்ளது.
ஐபேட் 3 மாடலின் பேட்டரி வசதி பற்றி தைவான் எக்கனாமிக்ஸில் செய்தி வெளியானது.
இந்த ஐபேட் 3 மாடலின் பேட்டரி சிம்ப்லோ டெக்கனாலஜி கோ மற்றும் டைனபேக் இன்டர்நேஷன்ல் டெக்கனாஜி கார்ப் இணைந்து சிறப்பான முறையில் தயாரித்திருக்கிறது.
மிக மிக கவனத்துடனும், வாடிக்கையாளர்களின் வசதியை மனதில் கொண்டும் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த மாடல் இலகுவான எடை கொண்டதாக மட்டும் அல்லாமல் மிகவும் மெல்லிய தடிமன் கொண்டதாகவும், நீளமான வடிவம் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
ஐபேடின் இந்த புதிய தோற்றம் வாடிக்கையாளர்கள் மத்தியில் நிச்சயம் ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும்.
இந்த புதிய பேட்டரி 20%-30% வரை அதிக விலை கொண்டதாக இருக்கும். ஏனென்றால் இதன் தரம் அப்படி.
ரெட்டினா டிஸ்ப்ளே வசதி கொண்ட ஐபேட்- 3, கேட்ஜெட்ஸ் பட்டியலில் முதல் இடத்தைப் பிடிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
ஆனால் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் ஐ பேட் மாடலில் மெமரியை விரிவுபடுத்தும் வசதி இல்லை என்ற குறை இதிலும் இருக்கும் என்று தெரிகிறது.
இந்த 2011 ஆண்டு கடைசி மாதத்தில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ரெட்டினா டிஸ்ப்ளே வசதி இதில் உருவாக்கப்படுவதாக இருந்தால் 2012 பாதி மாதம் வரை கால அவகாசம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் 64 ஜிபி வசதி அளிக்கப்பட உள்ளது.மற்றும் இதல் ஹெச்டிஎம்ஐ காம்பாட்டிபிளிட்டி வசதியும் உள்ளது. இந்த ஹெச்டிஎம்ஐ வசதிக்கு இதலுடைய அடாப்டர் சப்போர்ட் செய்கிறது. இதில் முகப்பு மற்றும் ரீயர் கேமிரா வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் ஐபேட்-3 ரூ.40,000 விலையில் வரும் என்று எதிபார்க்ப்படுகிறது.
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.