Pages

Wednesday, December 7, 2011

Tamil Cinema News - 9th Chennai International Film Festival | 9வது ஆண்டு சென்னை சர்வதேச திரைப்பட விழா

9th Chennai International Film Festival
ஆண்டு தோறும் நடைபெறும் சென்னை சர்வதேச திரைப்பட விழா, 9வது ஆண்டாக வருகிற 14ஆம் தேதி சென்னையில் துவங்குகிறது. 9 நாட்கள் நடைபெற இருக்கும் இவ்விழாவில் 44 நாடுகளில் தயாரான மொத்தம் 154 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

வருகிற 14ஆம் தேதி துவங்கும் இத்திரைப்பட விழா டிசம்பர் 22ஆம் தேதி வரை மொத்தம் 9 நாட்கள் நடைபெற இருக்கிறது. சென்னை உட்லண்ட்ஸ், ஐநாக்ஸ், சத்யம், பிலிம்சேமர் ஆகிய திரையரங்குகளில் நடைபெற இருக்கும் இந்த விழாவில், பிரான்சு, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, டென்மார்க், பின்லாந்து, ஆஸ்திரியா, எகிப்து, ஈரான், இத்தாலி உள்ளிட்ட 44 நாடுகளில் தயாரான மொத்தம் 154 படங்கள் திரையிடப்படுகின்றன. அவற்றில் 9 படங்கள் இந்தியன் பனோராவிலும், 8 படங்கள் கான் படவிழாவிலும் திரையிடப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சர்வதேச படவிழாவையொட்டி, தமிழ்ப் படங்களுக்கான போட்டி ஒன்று நடைபெற இருக்கிறது. இதில் அவன் இவன், அழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும், ஆடுகளம், மைதானம், வாகை சூட வா, கோ, தெய்வத்திருமகள், வர்ணம், தூங்கா நகரம், வெங்காயம், முரண் ஆகிய 12 படங்கள் போட்டியிடுகின்றன.

போட்டியில் தேர்வு செய்யப்படும் சிறந்த படத்திற்கு, முதல் பரிசாக ரூ.2 லட்சம் வழங்கப்படும்.



Official Website

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.